அண்மைய செய்திகள்

recent
-

எல்ல வனத்தில் தீ பரவல்; சுமார் 200 ஏக்கர் தீக்கிரை

பதுளை – எல்ல வனத்தில் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த Bell-212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெல்லவாய பகுதியிலிருந்து நீரைக் கொண்டு சென்று தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க குறிப்பிட்டார். 

 வனத்தில் நேற்றிரவு பரவிய தீ தொடர்ந்தும் பரவி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்றிரவு 7 மணியளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். வனஜீவராசிகள் அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எல்ல வனத்தில் தீ பரவல்; சுமார் 200 ஏக்கர் தீக்கிரை Reviewed by Author on March 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.