நெல் நிர்ணய விலை இண்மையால் மன்னாரில் விவசாயிகள் தொடர்சியாக பாதிப்பு
இலங்கையின் நெல் நிரம்பல் சந்தையில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்தின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டாலும் மாவட்ட விவசாயிகளின் நெல் உற்பத்திக்கான விலை நிர்ணயத்தை அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தாமையினால் தனியார் சந்தையின் நிரந்தரமற்ற நெல் விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கால நிலை பிரச்சினைகள், கால்நடை பிரச்சினைகள் ,நீர் தட்டுப்பாடுகளை கடந்து முழுமைப்படுத்தப்படும் நெற்செய்கையை திருப்தியான விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்ற நெல் காய்ந்த நிலையிலேயோ கொள்வனவு செய்யப்படுவதனால் நெல்லை காய வைப்பதற்கு ஒழுங்கான இடம் இண்மையால் வீதிகளிளேயே காயவைப்பதாகவும் அவ்வாறு காய வைப்பதனால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் இருக்கும் சுமைகளுடன் மேலதிக சுமைகளும் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்கள் நிர்ணய விலைக்கான கோரிக்கைகள் தங்களால் முன் வைக்கப்படுகின்ற போதிலும் நெல்லை காய வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கோரப்படுகின்ற போதும் இதுவரை அவற்றுக்கான நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இவ்வாறான நிலை தொடர அரசாங்கம் அனுமதி அழிக்க கூடது எனவும் நெல்லுக்கான நிர்ணய விலையை விவசாயிகளுடன் அரச அதிகாரிகள் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும் எனவும் அதே நேரம் வலய ரீதியாக நெல் காய வைப்பதற்கான இடங்களையும் களஞ்சியப்பட்த்துவதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களும் அதிகாரிகளும் மேற்கொண்டு தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் நிர்ணய விலை இண்மையால் மன்னாரில் விவசாயிகள் தொடர்சியாக பாதிப்பு
Reviewed by Author
on
March 26, 2021
Rating:

No comments:
Post a Comment