2ம் இணைப்பு-தலைமன்னாரில் புகையிரதத்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து-மாணவன் ஒருவர் பலி-மாணவர்கள்,பயணிகள் என பலர் காயம்
இன்று செவ்வாய்க்கிழமை(16) மதியம் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த போது தலைமன்னார் பியர் பகுதியில் வைத்து மதியம் 2 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியது.
இதன் போது குறித்த பேரூந்து பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என சுமார் 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அம்புலான்ஸ் வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
-இந்த போது குறித்த விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 24 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து சம்பவத்தை அறிந்த மக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை சூழ்ந்து கொண்டனர்.
இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குறுதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக குறுதி வழங்க விரும்புபவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் இணைப்பு-தலைமன்னாரில் புகையிரதத்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து-மாணவன் ஒருவர் பலி-மாணவர்கள்,பயணிகள் என பலர் காயம்
Reviewed by Author
on
March 16, 2021
Rating:

No comments:
Post a Comment