தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்
நேற்று (15) இரவு 07.30 மணியளவில் தனது வீட்டில் மதுபோதையில் 42 வயதுடைய மகனுக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் போது மகன் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
கத்தி குத்துக்குள்ளான தந்தை அவ்விடத்திலேயே மரணமானதாக தெரிவித்த பொலிஸார் சடலம் நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும் தலைமறைவான நபரை கைது செய்ய நாவலப்பிட்டி மற்றும் குருந்துவத்தை பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணையில் ஈடுபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்
Reviewed by Author
on
March 16, 2021
Rating:

No comments:
Post a Comment