மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தினம்
பிரதேச ரீதியில் சிறந்த பெண் முயற்சியாளர்களை கெளரவிக்கும் முகமாகவும் மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மகளீர் தினத்தில் சிறந்த வீராங்கனை ,சிறந்த பெண் முயற்சியாளர்கள், பிரதேச ரீதியாக தெரிவு செயப்பட்டு அவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசீல்களும் வழங்கப்பட்டது
அதே நேரத்தில் முன்னால் வடமாகாண பிரதி பிரதம செயளாலராக கடமையாற்றி தற்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பொறுப்பேற்றுள்ள திருமதி.ஸ்ரான்லி டிமேல் அவர்களுக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன் நினைவு சின்னமும் பிரதேச செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் அவர்களும் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலக கணக்காளர் நிர்வாக உத்தியோகஸ்தர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தினம்
Reviewed by Author
on
March 15, 2021
Rating:

No comments:
Post a Comment