வனப்பகுதிக்குள் காணாமல் போன இளைஞனை தேடும் பணி
முறைப்பாட்டையடுத்து காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் பொதுமக்களும் பொலிஸாரும் ஐந்தாவது நாட்களாக போபத்தலாவ காட்டுப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்ட போதும் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை.
இந் நிலையில் கடந்த 11 ஆம் திகதி பொகவந்தலாவ பொலிஸாரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து மோப்ப நாயை வரவழைந்து போபத்தலாவ வனப்பகுதிக்குள் சுமார் 06 மணித்தியாலங்கள் பொலிஸாரும் பொது மக்களும் பாரிய தேடுதல் நடவடிகையில் ஈடுபட்ட போதும் அது பலனலிக்கவில்லை.
சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் குயினா மேல்பிரிவு அதே அயல் தோட்ட மக்கள் தொழிலுக்கும் செல்லாது தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போன இளைஞனுக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் இருப்பதாக தெரிவித்த அவரது தாயார் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார்.
வனப்பகுதிக்குள் காணாமல் போன இளைஞனை தேடும் பணி
Reviewed by Author
on
March 13, 2021
Rating:

No comments:
Post a Comment