பாட்டு கேட்டு காதலிக்கும் பெண் குருவி, இசையிழந்து அழியும் குருவி இனம்
"இந்த ரிஜென்ட் ஹனி ஈட்டர் பறவை மற்ற பறவைகளோடு சுற்றித் திரிந்து, இவ்வினக் குருவிகள் பாடும் பாட்டை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை" என விளக்குகிறார் முனைவர் ராஸ் க்ரேட்ஸ்.
அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் ராயல் சொசைட்டி சஞ்ஜிகையில் பிரசுரமாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ராவில் இருக்கும் தேசிய பல்கலைக்கழகத்தில் இருக்கும் `டிஃபிகல்ட் பேர்ட் ரிசர்ச்` என்கிற குழுவில் உறுப்பினராக இருக்கும் முனைவர் க்ரேட்ஸ், இந்த இன குருவிகளின் பாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
அந்த இனக் குருவிகளைப் பிடித்து அதன் பாட்டைக் கற்றுக் கொடுக்கிறார் முனைவர் க்ரேட்ஸ்.
ஆராய்ச்சியாளர்கள், ரிஜென்ட் ஹனி ஈட்டர் குருவியின் பாட்டைப் படிக்கத் தொடங்கவில்லை, ஆனால் அந்த இனப் குருவிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.
"ரிஜென்ட் ஹனி ஈட்டர் இன குருவிகள் மிகவும் அரிதானவை. அக்குருவிகள் வசிக்கும் இடம் பிரிட்டனை விட 10 மடங்கு பெரியது" என்கிறார் முனைவர் க்ரேட்ஸ்.
இந்த கவனமான கடின உழைப்பைக் கோரும் தேடலில், அவ்வினக் குருவிகள் வேறு ஏதோ பாடல்களை பாடுவதை கவனித்தார்.
"அக்குருவிகள் பாடும் பாட்டு ரிஜென்ட் ஹனி ஈட்டர் ரக குருவிகளைப் போன்று இல்லை. அக்குருவிகள் வேறு ஏதோ ஓர் இத்தைப் போலப் பாடின" என நினைவுகூர்கிறார் க்ரேட்ஸ்.
மனிதர்கள் பேசிப் பழகுவதைப் போலத் தான் பாடல்களைப் பாடும் பறவைகள் தங்களின் பாடல்களைக் கற்கின்றன.
"பறவைகள் தங்கள் கூட்டை விட்டு வெளியேறிய பின், அவை, மற்ற வயது முதிர்ந்த ஆண் குருவிகளோடு பழக வேண்டும். அப்போது தான் அக்குருவிகளால், ஆண் குருவியின் பாடல்களைக் கவனித்து காலப் போக்கில் மீண்டும் பாட முடியும்" என்றார் க்ரேட்ஸ்.
ரிஜென்ட் ஹனி ஈட்டர் இனம், தங்களின் 90 சதவீத வாழ்விடத்தை இழந்து விட்டன. தற்போது அவ்வினக் குருவிகள், மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிதறிக் கிடக்கின்றன. எனவே இளம் வயது குருவிகளால், வயது முதிர்ந்த குருவிகளைக் கண்டுபிடித்து அதன் பாட்டைக் கேட்க முடியவில்லை.
பாட்டு கேட்டு காதலிக்கும் பெண் குருவி, இசையிழந்து அழியும் குருவி இனம்
Reviewed by Author
on
March 18, 2021
Rating:
Reviewed by Author
on
March 18, 2021
Rating:



No comments:
Post a Comment