20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க கட்டாயப்படுத்தல்; எதிர்த்து போராட்டம்!
ஆனால் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ பச்சைக்கொழுந்து நாளொன்றுக்கு பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதுடன் அவ்வாறு 20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் வாரத்தில் 03 நாட்களே வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தல் விடுப்பத்தாகவும் இதுவரை வழங்கியிருந்த சுகாதாரம் சம்பந்தமான சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அரசாங்கம் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதோடு, அத்தியாவசிய விலை உயர்வினாலேயே ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வை கோரினோம்.
ஆனால் இப்போது பச்சைக்கொழுந்து அதிகளவில் பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றது. ஆகவே நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், தொழிலமைச்சர் மற்றும் மலையக பிரதிநிதிகள் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது தேயிலை கொழுந்து அதிகளவில் காணப்படுகிறது. அகவே தான் கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்க கோரினோம். தேயிலை செடிகளில் வளர்ந்திருக்கும் பச்சைக்கொழுந்தினை வீணாக வெட்டி வீச முடியாதெனவும் குறிப்பிட்டார்.
சுமார் 300 தொழிலாளர்கள் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கலைந்து சென்றனர் .
20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க கட்டாயப்படுத்தல்; எதிர்த்து போராட்டம்!
Reviewed by Author
on
April 20, 2021
Rating:
Reviewed by Author
on
April 20, 2021
Rating:


No comments:
Post a Comment