தென் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம் இன்று
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது தற்போது தென்மாகாணத்தில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற் கொண்டு மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மாகாணங்களில் உள்ள முன்பள்ளி மற்றும் பிரிவெனாப் பாடசாலைகளும் மூடப்படும்.
இவ்விரு மாகாணங்களிலும் உள்ள தனியார் பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் எனறும் குறிப்பிட்டார்.
பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் இன்று இடம்பெறுகின்ற போதிலும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போது சுகாதாரப் பாதுகாப்பு முறைகளை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம் இன்று
Reviewed by Author
on
April 27, 2021
Rating:
Reviewed by Author
on
April 27, 2021
Rating:


No comments:
Post a Comment