அண்மைய செய்திகள்

recent
-

சட்ட விரோதமாக மாலத்தீவு செல்ல முயன்ற பங்களாதேசைச் சேர்ந்தவர் தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கைது.

சட்டவிரோதமாக மாலத்தீவு செல்ல முயன்ற பங்களாதேசைச் சேர்ந்த நபர் ஒருவர் தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வைத்து தனுஸ்கோடி பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்துள்ளனர். அவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் அரிச்சல்முனை கடற்கரையில் நடமாடிய பங்களாதேசைச் சேர்ந்த நபர் குறித்து தனுஸ்கோடி மீனவர்கள் தனுஸ்கோடி காவல் நிலைய தனிப்பிரிவு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

 தனிப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அரிச்சல் முனை கடற்கரைக்கு விரைந்து சென்ற பொலிஸார் பங்களாதேசைச் சேர்ந்த திலீப் நாராயணனை பிடித்து விசாரணை நடத்தியதில்; கடன் பிரச்சனை அதிகமாக இருப்பதால் வேலை தேடி படகில் சட்ட விரோதமாக மாலத்தீவு செல்வதற்காக பங்களாதேசை சேர்ந்த குலாம் என்ற ஏஜென்டிடம்; பணம் கொடுத்ததாகவும் அவர் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தனுஸ்கோடி வழியாக மாலத்தீவுக்கு படகில்; சென்று விடலாம் என கூறியதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் இருந்து பேருந்தில் புறப்பட்டு மதுரை வந்துள்ளார். 

 பின்னர் அங்கிருந்து பேருந்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் வந்ததாகவும், பின்னர் தனுஸ்கோடி செல்லும் பேருந்து இல்லாததால் சாலை மார்க்மாக நடந்து தனுஸ்கோடி அரிச்சல்முனை வந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்தது திலீப் நாராயணனை கைது செய்த போலீசார் தனுஸ்கோடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 போலீசாரால் கைது செய்யப்பட்ட திலீப் நாரயண் மீது சந்தேகம் உள்ளதால் இவர் மாலத்தீவு செல்ல தனுஸ்கோடி வந்தாரா? அல்லது இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவதற்காக வந்த போது பொலிஸாரிடம் சிக்கினரா என்பது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட திலிப் நாராயணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் திலீப் நாராயணனை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.


சட்ட விரோதமாக மாலத்தீவு செல்ல முயன்ற பங்களாதேசைச் சேர்ந்தவர் தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கைது. Reviewed by Author on April 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.