பயணக் கட்டுப்பாடு நீக்கம் - யார் யாருக்கு வெளியே செல்ல முடியும் தெரியுமா?
அதேவேளை இன்று முதல் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைக்காக செல்ல முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டை இதற்காக பயனபடுத்த முடிந்த போதிலும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைவாகவே வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்..
இதற்கமைய இன்றைய தினம் (17) அடையாள அட்டையில் இறுதி இலக்கம் ஒன்றை இலக்கங்களை கொண்டவர்கள் (1,3,5,7,9) வௌியில் செல்ல முடியும்.
இதே வேளை எதிர்வரும் 14 நாட்களுக்கு எவ்வாறு நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக நிறுவன பிரதானிகளால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
கெஸினோ உள்ளிட்ட சமூக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. 20 வீதமானோருக்கு மாத்திரமே வர்த்தக நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஒரு ஆசனத்தில் ஒருவர் மாத்திரம் பயணிக்க முடியும். வாடகை வாகனங்களில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். பொதுப் போக்குவரத்து மற்றும் அலுவலக சேவை போக்குவரத்து தொடர்பாக நாளை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு நீக்கம் - யார் யாருக்கு வெளியே செல்ல முடியும் தெரியுமா?
Reviewed by Author
on
May 17, 2021
Rating:

No comments:
Post a Comment