மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
அதனடிப்படையில் வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும், ஏறாவூர், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 13 பேரும்,
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், களுவாஞ்சிகுடி, கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 06 பேரும், செங்கலடி, ஆரையம்பதி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 05 பேரும்,
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 32 பேர் உட்பட, நேற்றைய தினம் வவுனதீவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தனியார் ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் 14 பேர் உட்பட மொத்தமாக 128 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 14 நாட்களில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 71 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது அடையாளப்படுத்தப்பட்டு வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதுடன், குணம் குறிகளுடன் கொவிட் தொற்றாளர்கள் காணப்படுகின்றனர், இவர்களை தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிட்சை வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
எமது மாவட்டத்தில் இடப்பற்றாக்குறை நிலவிவருவதால் மேலதிகமாக இனங்கானப்பட்டுவரும் புதிய நோயாளர்களையும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களாகிய உங்களுக்கு காய்ச்சல் மற்றும் சுவாச அறிகுறிகளான இருமல், தும்மல் குணம் குறிகள் ஏற்படும்போது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று உங்களை பரிசோதனை செய்துகொள்ளுவதன் மூலம் உங்களுக்கு கொவிட் தொற்று உள்ளதா இல்லையா என்று அறிந்துகொள்ள முடியும்.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்திலும் சுகாதார நடைமுறைகளைப் போணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Reviewed by Author
on
May 27, 2021
Rating:
Reviewed by Author
on
May 27, 2021
Rating:


No comments:
Post a Comment