மன்னார் நகர பிரதேச செயலகத்தில் கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பினை அதிகரிக்கும் ஆயுள்வேத மருத்துவ குடிநீர்....
இந்நிகழ்வினை எமது பிரதேச செயலாளர் அவர்கள் தொடங்கி வைத்திருந்தார்.
கொதித்த தண்ணீரில் அரைத்த இஞ்சி, மரமஞ்சள், மல்லித்தூள் கலந்து தயார் செய்த ஆயுர்வேத மருத்துவ குடிநீரை பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் , கணக்காளர் , நிர்வாக உத்தியோகத்தர் , ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் மற்றும் அனைத்து பிரதேச செயலக அலுவலர்களும் கலந்து கொண்டு பருகினர்.
மேலும் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பொது மக்களுக்கும் இந்த மருத்துவ குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இவ் மருத்துவ குடிநீர் தயாரிக்கும் முறை.
தேவையான பொருட்கள்-
இஞ்சி - 100g
மல்லி - 100g
மரமஞ்சள் - 100g
அரத்தை - 100g
செய்முறை- (1 நபருக்குரியது)
250ml தண்ணீரை அடுப்பில் நன்றாக கொதிக்க விடும்போது அரைத்த இஞ்சி 2 தேக்கரண்டி சேர்க்கவும் பின்னர் அடுப்பின் தகனத்தை குறைத்து கொண்டு வறுத்து பொடிசெய்த மல்லி
2 தேக்கரண்டி ,மரமஞ்சள் பொடி 2 தேக்கரண்டி ,பொடி செய்த அரத்தை
2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகவும்
.
.
மன்னார் நகர பிரதேச செயலகத்தில் கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பினை அதிகரிக்கும் ஆயுள்வேத மருத்துவ குடிநீர்....
Reviewed by Author
on
May 06, 2021
Rating:

No comments:
Post a Comment