அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணித்தாய்மாருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

விளம்பரம் தற்போது அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றினால் 130 கர்ப்பிணித்தாய்மாருக்கு கொரோனா தொற்றியுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கர்ப்பிணியான நீங்களும், கருவிலுள்ள உங்கள் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். இதற்காக கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதியாக கடைப்பிடிப்பதும் , உரிய சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும். கர்ப்பிணித் தாய்க்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். சாய்சாலைக்கு(கிளினிக்) அல்லது வைத்தியசாலைக்கு செல்ல நேர்ந்தால் , கொவிட்19 நோயிலிருந்து தவிர்ப்பதற்காக கீழ்வரும் ஆலோசனைகளை உறுதியாக கடைப்பிடியுங்கள்.

 1. காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல். 

 2. எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல். 

 3. நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல். 

 4. மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு  செல்லாதிருத்தல்.  

5. எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல். 

 கொவிட் நோய் பயத்தின் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதிலும் , தாமதமாவது காணக் கிடைக்கின்றது. இத் தாமதத்தின் காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.

 கொவிட் ஆபத்து அதிகரிக்கும் காலத்தில் வழமையான சுகாதார சேவைகளை வழங்கப்படுவதற்கு இயலாத நிலைமை இருக்க முடியும். ஆதலால், உங்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி அவர்களை அல்லது குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை தொடர்புகொண்டு, மேற்குறித்த சேவைகளை தற்போது பெறக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் இன்றே அறிந்து கொள்ளுங்கள். "கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தான சமிக்கைகள் " தொடர்பில் நீங்கள் இப்போதே அறிந்திருக்கக் கூடும்.

 மீண்டுமொருமுறை அவற்றை ஞாபகப்படுத்துவதென்றால், காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு , வலிப்பு, நெஞ்சில்/வயிற்றில் வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிய நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும். இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும் வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.

 உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை அவரிலிருந்து விலகி இருங்கள். தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோனா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள்.

 வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில்...... இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும். இத்தகவல்களை இலங்கையிலுள்ள சகல தாய்மாரினதும் மற்றும் எதிர்கால சிறுவர் பரம்பரையினரினதும் நல்வாழ்விற்காக பகிருமாறு நாம் உங்கள் சகலரையும் வேண்டுகிறோம்

கர்ப்பிணித்தாய்மாருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் Reviewed by Author on May 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.