அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் - மனைவி இறந்த துக்கத்தில் விபரீத முடிவெடுத்த கணவன்

எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாது. எங்கள் இருவரையும் பிரிக்க வேண்டாம். என்றும் என் உயிர் அவளுக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கைகோத்து புதைக்க வேண்டும்' எனத் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதியுள்ளார் பரமசிவம். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகேயுள்ள மருகால்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம் (37). இவர் வீட்டிலேயே செல்போன் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷாப் நடத்திவந்தார். பரமசிவத்தின் மனைவி சாரதா (35). சாரதாவுக்கு உடல்நலக்குறைவு எற்பட்டதால் கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் சாரதா நேற்று முன்தினம் காலை உயிரிழந்துள்ளார். 

 இதனால் உடைந்துபோன பரமசிவம், மிகவும் சோகமாக இருந்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பரமசிவம் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக சுசீந்திரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் பரமசிவம் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில் "நான் பரமசிவன், என் மனைவி சாரதா. அவள் இல்லை. நானும் இனி உயிர் வாழ மாட்டேன்.

 எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாது. எங்கள் இருவரையும் பிரிக்க வேண்டாம். என்றும் என் உயிர் அவளுக்கு மட்டும்தான். ஒரே இடத்தில் கைகோத்து புதைக்க வேண்டும். என் மனைவி தாலி அவள் கழுத்தில் இருக்க வேண்டும். அதை கழட்டக் கூடாது. என் சாவுக்கு நான் மட்டுமே காரணம். இப்படிக்கு பரமசிவன் சாரதா" என அந்க்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், ஒரு ஹார்ட் வரைந்து அதில் 'சிவா சாரா லவ்' என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "பரமசிவனுக்கும் சாரதாவுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. பரமசிவனும் சாரதாவும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் அன்பாக இருந்துள்ளனர். இந்தநிலையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் பரமசிவம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் கைப்பட எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.


இந்தியாவில் - மனைவி இறந்த துக்கத்தில் விபரீத முடிவெடுத்த கணவன் Reviewed by Author on May 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.