அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு கடந்த வௌ்ளிக்கிழமை (21) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் கால வரையறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

 தற்போது போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பாடசாலையில் இருந்து பெற்றுக் கொள்ளவேண்டிய சான்றிதழ்கள் இல்லாமல் இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டுபாடு நீக்கப்பட்டதன் பின்னர் சான்றிதழ்களை சமர்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு Reviewed by Author on May 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.