அண்மைய செய்திகள்

recent
-

எத்தனை முறை என்னைச் சாகடிப்பீங்க?' - 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரீஸை ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பது ஏன்?

எங்களைப் பொறுத்தவரை கடைசிவரை, களத்தில் நின்று போராடியவர் எங்கள் தலைவர் பிரபாகரன். ''தமிழீழக் கொள்கையில் இருந்து நான் பின்வாங்கினால், என் பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்'' என்றவர், அதை, 2002 சர்வதேச ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் உறுதி செய்தவர் அவர். அவரை இது போன்று வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதுபோலக் காட்சியமைத்திருப்பது அவரின் வீரத்தையும் தியாகத்தையும் அவமதிக்கும் ஒரு செயல். அதேபோல, அவரின் தம்பி இந்தியாவில் இறந்துபோவதாக ஒரு காட்சி வருகிறது. அதற்குப் பிறகு `என் தம்பியைக் கொன்றவர்களை நான் பழிவாங்கியே தீருவேன்’ என பாஸ்கரன் கதாபாத்திரம் வசனம் பேசுவதாகக் காட்சி இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் ஆதரவோடு முப்பதாண்டுக்காலம் நடந்த மக்கள் போராட்டத்தை, அதன் தலைவரை ஏதோ தனிப்பட்ட இழப்புக்காகப் பழி வாங்கத் துடிப்பதைப்போலக் காட்சியமைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. 

---------- 

ஒரு மகள் என அனைவரையும் களத்தில் இழந்தவர் தலைவர் பிரபாகரன். அவரைப் போய் தன் சுய விருப்பு வெறுப்புகளுக்காக செயல்படுபவராகக் காட்டியிருப்பது வன்மம் தவிர வேறொன்றும் இல்லை. அது மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரத்தின் கையில் மதுக் கோப்பை இருப்பதாகக் காட்டியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற ஒரு செயல். மது, சிகரெட், புகையிலை போன்ற பொருள்கள் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவரின் கையில் மதுக்கோப்பை இருப்பதுபோலவும், அவர் மற்றொரு போராளிக்கு மது அருந்தக் கூடாது என அறிவுரை சொல்வதுபோலவும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. சிங்கள ராணுவமே இது போன்ற ஒரு விமர்சனத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது முன்வைத்தது கிடையாது.

 -------------- 

கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், சொல்லப்படும் கருத்து உண்மையாக இருக்க வேண்டும். நல்ல நோக்கத்துக்காக இருக்க வேண்டும். புனைவாக இருந்தால், முழுமையாகப் புனைவாக எடுக்க வேண்டும். அதைவிடுத்து பாதி உண்மையையும், மீதி புனைவு என்கிற பெயரில் அவதூறுகளையும் வாரி இறைப்பதையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.



எத்தனை முறை என்னைச் சாகடிப்பீங்க?' - 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரீஸை ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பது ஏன்? Reviewed by Author on June 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.