அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மனித உரிமை ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

மனித உரிமை ஆணைக்குழு தங்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி இம்மானுவேல் உதயச்சந்திரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தந்தை சில்வாவின் சிலைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் மேற்படி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் 

 அவர் மேலும் தெரிவிக்கையில் ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் உறவுகள் ஆகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டுமெனவும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம் 12 வருடங்களாக போராடி தனிப்பட்ட விதமாக நான்கு வருடங்கள் போராடி இதுவரை அரசாங்கத்தினால் எந்த பதிலும் கிடைக்கவில்லை இலங்கை அரசாங்கத்தின் ஊடக எந்த பொறிமுறையும் கிடைக்காது எனவே நாங்கள் சர்வதேச சமூகத்திடம் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது எந்த ஒரு பிரயோஜனமும் இன்றி காணப்படுகிறது

 எந்த அமைப்புக்களாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அரசாங்கத்தோடு சேர்ந்து வேலை செய்பவராக இருந்தாலும் அனைவரும் எங்களுக்கு பின்னால் நில்லுங்கள் எங்கள் உணர்வுகளை மதியுங்கள் மனித உரிமை ஆணைக்குழு இன்று எங்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுகின்றன அரசாங்கத்துடன் இணைந்து எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதனால் தான் நாங்கள் தனித்து போராடுகின்றோம் அரசாங்கத்தினால் எந்த நன்மையும் இல்லாமையால் தான் நாங்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றோம் எனவே எந்த அமைப்பாக இருந்தாலும் சரி எங்களோடு பின் நின்று எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் எஙகளுக்கு தோள் கொடுத்து எங்கள் உணர்வுக்கு மரியாதை கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்













மன்னாரில் மனித உரிமை ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் குற்றச்சாட்டு Reviewed by Author on July 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.