அண்மைய செய்திகள்

recent
-

டைனமைட் வெடிபொருள் வெடித்ததில் மீனவர் உயிரிழப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் இன்று(புதன்கிழமை) உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. 

 இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி-ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் அஷ்மீர் (26வயது) என தெரிவிக்கப்படுகின்றது. டைனமைட் என அழைக்கப்படும் வெடி பொருளை பயன்படுத்தி மூவர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த வெடி பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த குறித்த நபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டைனமைட் வெடிபொருள் வெடித்ததில் மீனவர் உயிரிழப்பு! Reviewed by Author on July 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.