அண்மைய செய்திகள்

recent
-

14 நாட்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்

காணாமல்போயிருந்த இரு மீனவர்களும் திருக்கோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14 நாட்களாக காணாமல்போயிருந்த இரு மீனவர்களையும் தேடி வந்தநிலையில், இவர்கள் தொடர்பாக திருக்கோணமலையேச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

 அதனடிப்படையில் காணாமல்போயிருந்த இரு மீனவர்களும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அவர்களின் நேரடித் தொடர்புகள் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. மேலும் காணமல் போயிருந்த இரு மீனவர்களினதும் படகின் உரிமையாளர் ஐயூப்கான், இந்த விடயம் தொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

14 நாட்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் Reviewed by Author on July 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.