மணல்காடு கடற்கரையில் சுற்றிவளைப்பு: 41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை கடற்படையினர் சோதனைக்கு உட்படுத்த முயன்றபோது, சில மூடைகளை கடலில் வீசி சந்தேகநபர்கள் தப்பிச்செல்ல முயன்றதாக கடற்படை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுமார் 140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் இதன்போது கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறையை சேர்ந்த 22 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேகநபர்களும் சர்வதேச கடல் எல்லையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கேரள கஞ்சாவை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மணல்காடு கடற்கரையில் சுற்றிவளைப்பு: 41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Reviewed by Author
on
August 26, 2021
Rating:

No comments:
Post a Comment