அண்மைய செய்திகள்

recent
-

மட்டு ஜயங்கேணி ஆலயத்தில் கொரோனா சட்டத்தை மீறி செயற்பட்ட ஆலயதலைவர் செயலாளர் பொருளாளருக்கு எதிராக வழக்கு தாக்குதல்

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (08) தீ மிதிப்பு சடங்கு நடாத்திய நிலையில் பொலிசார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து திடீர் சுற்றிவளைபபை மேற்கொண்டு ஆலய தலைவர் செயலாளர் உட்பட சட்டத்தை மீறிய 3 பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசாருடன் இணைந்து சம்பவதினமான இன்று குறித்த ஆலையத்தை முற்றுகையிட்டு அங்கு சுகாதார நடைமுறைகளை மீறி ஆலையத்தில் மக்களை ஒன்றிணைத்தமை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது மீறி செயற்பட்ட குற்றஞ்;சாட்டப்பட்டு ஆலைய தலைவர் செயலாளர். பொருளாளர் உட்பட 3 எதிராக பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்து அவர்களை எதிர்வரும் புதன்கிழமை (11) ம் திகதி நீதிமன்றத்தில் ஆயராகுமாறு உத்தரவிட்டு அவர்களை விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் அதேவேளை குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி மாரியமன் ஆலைய உற்சவத்தில் சுகாதார சட்டத்தை மீறி பங்கேற்ற 114 பேருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மட்டு ஜயங்கேணி ஆலயத்தில் கொரோனா சட்டத்தை மீறி செயற்பட்ட ஆலயதலைவர் செயலாளர் பொருளாளருக்கு எதிராக வழக்கு தாக்குதல் Reviewed by Author on August 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.