அண்மைய செய்திகள்

recent
-

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு தற்போது மூன்றாவது டோஸ் தேவையில்லை : மருத்துவர் சந்திம ஜீவந்தர

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் போதுமான அளவு பாதுகாக்கப்படுகிறார்கள். ஆகையால் தற்போது கொவிட் -19 தடுப்பூசியின் மேலதிக டோஸ் தேவையில்லை என மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இஸ்ரேல், பிரான்ஸ், ஜேர்மன், பிரிட்டன் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள் கொவிட் -19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தொடர்பில் ஏற்கனவே திட்டமிட்டுள்ளன. 

இஸ்ரேல் தனது சனத்தொகையில் 57% ஆன மக்களுக்கு ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்கியுள்ளது. பலவீனமானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தொடர்பிலான பிரசாரத்தை ஆரம்பித்த முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி ஜூலை இறுதியில் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு தற்போது மூன்றாவது டோஸ் தேவையில்லை : மருத்துவர் சந்திம ஜீவந்தர Reviewed by Author on August 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.