728,000 AstraZeneca தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது
கொரோனா தொற்றுக்குள்ளாவோரில் 1.5 வீதமானவர்கள் மரணமடைவதுடன், பெரும்பாலானோர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அபாய நிலையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அநாவசியமாக வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும், இரண்டு மீட்டரில் சமூக இடைவௌியை பேணுவதுடன், பொதுமக்கள் அதிகம் கூடும் மங்கல, அமங்கல நிகழ்வுகளில் பங்கேற்பதை முற்றாக தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறும் நீண்டநாட்கள் தொடரும் நோய் நிலைமைகள் இருந்தால், ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறும் அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
728,000 AstraZeneca தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது
Reviewed by Author
on
August 07, 2021
Rating:
Reviewed by Author
on
August 07, 2021
Rating:


No comments:
Post a Comment