மன்னார் ஆத்திமோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள் செயற்ப்படுத்தி வழங்குமாறு பொது மக்கள் கோரிக்கை
குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஊடாக ஆத்திமோட்டை ,கள்ளியடி ,கோவில்குளம் ,கூராய் போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடந்து வந்த நிலையில் பல வருடங்களாக குறித்த சுகாதார நிலையம் பராமரிப்பு இன்றி பற்றைகள் புதர்கள் வளர்ந்த நிலையில் பாழடைந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
தங்கள் கிராமத்தில் அவசர சிகிச்சைக்கோ அல்லது விசக்கடி ஏற்படும் பட்சத்திலோ தற்போது தாங்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து பல கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் விடத்தல் தீவு வைத்திய சாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இல்லா விட்டால் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
எனவே மக்களின் சுகாதார தேவையை கருத்தில் கொண்டு பயன்பாடு இன்றி காணப்படும் குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள் செயற்படுத்தி வைத்தியர்கள் மருத்துவ ஊழியர்களை நியமித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னார் ஆத்திமோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள் செயற்ப்படுத்தி வழங்குமாறு பொது மக்கள் கோரிக்கை
Reviewed by Author
on
August 04, 2021
Rating:
Reviewed by Author
on
August 04, 2021
Rating:



No comments:
Post a Comment