அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு கிலோ கஞ்சாவுடன் சிறைத் தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரி கைது..!

மட்டக்களப்பு, காத்தான்குடியில் சிறைத் தண்டனை பெற்ற பிரல கஞ்சா வியாபாரியின் வீட்டை நேற்று (12) இரவு சோதனை நடத்திய போது அங்கிருந்து 2 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி உட்பட இருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தெரிவித்தார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரனைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே. பண்டார தலைமையிலான பொலிஸார் இராணுவ புலனாய்வு பிரிவினர் சம்பவ தினமான நேற்று 10 மணி அளவிவ் காத்தான்குடி பீச் வீதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.

 இதன்போது அங்கு முச்சக்கரவண்டியில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியுடன் 46 வயதுடையவர் ஒருவர் உட்பட இருவரை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் மீட்டனர். இதில் கைது செய்யப்பட் பிரதான சூத்திரதாரியான கஞ்சாவியாரி மிக நீண்டகால போதைப்பொருள் வியாபாரியும் எனவும் போதைப்பொருள் விற்பனைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவருமான காத்தான்குடியைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும், இவர் ஓட்டமாவடி, வாழைச்சேனை தொடக்கம் ஏறாவூர், காத்தான்குடி வரை கேரளா கஞ்சா மற்றும் போதைப்பொருள் ஏக வினியோகஸ்தராகச் செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரண்டு கிலோ கஞ்சாவுடன் சிறைத் தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரி கைது..! Reviewed by Author on August 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.