தடுப்பூசி செலுத்திய பின் தரையில் மயங்கி விழுந்த இளைஞர், யுவதிகள்! ; ஆனமடுவவில் சம்பவம்
சுகாதாரப் பிரிவு அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க நட வடிக்கை எடுத்ததாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் 20 முதல் 30 வயதிற்குட் பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது 2000 க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசிகளை செலுத்திய பின் 20 விநாடிகள் மத்திய நிலையத்தில் காத்திருக்குமாறு அவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவ்வாறு காத்திருந்த இளைஞர், யுவதிகள் சிலர் ஒரே நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.
சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு முதலுதவி வழங்கி சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் கள் உறவினர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திய பின் தரையில் மயங்கி விழுந்த இளைஞர், யுவதிகள்! ; ஆனமடுவவில் சம்பவம்
Reviewed by Author
on
September 22, 2021
Rating:
Reviewed by Author
on
September 22, 2021
Rating:


No comments:
Post a Comment