நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன - இராணுவ தளபதி
அக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது வழிகாட்டல்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர் சுகாதாரம், பொது போக்குவரத்து, விவசாயம், பொது சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்படும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 53% இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் , 30 வயதுக்கு மேற்பட்ட 98% மக்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
20 முதல் 30 வயதிற்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 % ஒரு தடுப்பூசியை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன - இராணுவ தளபதி
Reviewed by Author
on
September 27, 2021
Rating:

No comments:
Post a Comment