நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு COVID தடுப்பூசி
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நாளை காலை 9 மணி முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னதாக குறித்த சிறுவர்களை விசேட வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதிக்கவுள்ளதாக, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.
இந்த சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதுடன், முதலாவது டோஸ் ஏற்றப்பட்டு 4 வாரங்களின் பின்னர் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது.
சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.
நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு COVID தடுப்பூசி
Reviewed by Author
on
September 24, 2021
Rating:
Reviewed by Author
on
September 24, 2021
Rating:


No comments:
Post a Comment