அண்மைய செய்திகள்

recent
-

கப்பல் இயந்திரங்களின் எரிந்த நச்சு எண்ணெயை கொட்டும் இடமாக இலங்கை மாறிவருகின்றது.


கப்பல் இயந்திரங்களின் எரிந்த நச்சு எண்ணெயை கொட்டும் இடமாக இலங்கை மாறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல்களில் இருந்து வெளியேறி எண்ணெயை சுத்திகரிப்பதற்கான வசதி இலங்கையில் இல்லாத நிலையில் அவற்றை சேகரிப்பதற்கு 20 தனிநபர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய சுற்றாடல் அமைச்சரவை எப்படி இவர்களிற்கு இதற்கான அனுமதியை வழங்கியது என விசாரணை செய்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எனினும் சிரேஸ்ட அமைச்சர்களின் ஆதரவுடனேயே குறிப்பிட்ட 20 பேரும் செயற்படுவதும் அவர்களிற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி விசேட விசாரணை பிரிவின் மூலம் விசாரணையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவி;த்துள்ளார். 

இந்த மோசடி நீண்டகாலமாக இடம்பெறுகின்றது,இந்த மோசடியால் நாட்டிற்கு பெரும் அந்நியச்செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைதடுத்துநிறுத்துவதற்காகவும் பரிமாறப்பட்ட பெருமளவு பணம் குறித்தும் விசாரணை இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவருடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வேன் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தெரிவிப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கப்பல் இயந்திரங்களின் எரிந்த நச்சு எண்ணெயை கொட்டும் இடமாக இலங்கை மாறிவருகின்றது. Reviewed by Author on September 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.