மன்னார் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள 3 மில்லியன் ரூபாய் திட்டம் தொடர்பில் ஆராய்வு.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , பிரதேசச் செயலாளர் டெலிசியஸ் கனியூட் அரவிந்தராஜ் உட்பட கிராம சேவையாளர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மட்ட அபிவிருத்தி பணியாளர்கள் கழந்து கொண்டனர்.
இதன் போது ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுக்ளுக்கும் ஒதுக்கப்பட்ட 3 மில்லியன் ரூபாய் நிதிக்கான அபிவிருத்திகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி குறித்த செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதுடன் குறித்த 3 மில்லியன் ரூபாய் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திக்கு வீதாசார அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடுகள் முன்வைக்கப்பட உள்ளது.
மேலும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் மடு,நானாட்டான்,முசலி மற்றும் மன்னார் பிரதேசச் செயலகங்களிலும் குறித்த கூட்டம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள 3 மில்லியன் ரூபாய் திட்டம் தொடர்பில் ஆராய்வு.
Reviewed by Author
on
September 28, 2021
Rating:

No comments:
Post a Comment