சாரதியின் நித்திரை - புகையிரத கடவையில் விபத்து - ஒருவர் பலி!
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்தலத்திலே மரமாகியுள்ளதோடு, காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அதிதீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் நேற்று (11) இரவு 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல். சிறிசேன என்ற 55 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையில் இருந்து கந்தளாயிக்குச் சென்ற கார், புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போத இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
சாரதியின் நித்திரை - புகையிரத கடவையில் விபத்து - ஒருவர் பலி!
Reviewed by Author
on
October 12, 2021
Rating:

No comments:
Post a Comment