அண்மைய செய்திகள்

recent
-

பஸ்கள், ரயில்கள் கடுமையான சுகாதார வழிகாட்டலின் கீழ் இயக்கப்படும்!

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், பாதுகாப்பான முறையில் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளன. சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் மற்றும் பஸ் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரான கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாத எந்தவொரு நபரையும் பேருந்தில் ஏற்ற வேண்டாம் என பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் பஸ்கள் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சமூக இடைவெளியை பராமரிக்கவும், நெரிசலை தவிர்க்கவும் போதுமான எண்ணிக்கையிலான பஸ்களை சேவையில் அமர்த்துமாறு சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ்கள், ரயில்கள் கடுமையான சுகாதார வழிகாட்டலின் கீழ் இயக்கப்படும்! Reviewed by Author on October 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.