அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு

மாணவர்கள் மத்தியில் நடன கலையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் வங்காலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரி வைபவரீதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது 

 சிறுவர்கள் ,இளைஞர்கள் நடன பயிற்சியை பெற்று கொள்ளும் வகையில் பிரபல நடன ஆசிரியர் அர்ஜூன் லெம்பேர்ட் நடன கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவுள்ளார் குறித்த நடன கல்லூரியின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் வங்காலை பங்குதந்தை, நானாட்டான் புனித டிலாசால் பாடசாலை அதிபர், தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலை அதிபர்,கலாச்சார உத்தியோகஸ்தர், அருட்சகோதரிகள் கிராம உத்தியோகஸ்தர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டனர் குறித்த நிகழ்வில் டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் மாணவர்களினால் உருவாக்கப்பட்ட பாடல் காணொலியும் வைபவரீதியாக வெளியிட்டு வைக்கப்படமை குறிப்பிடதக்கது









மன்னாரில் டான்ஸிங் டைமன்ஸ் நடன பயிற்சி கல்லூரி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு Reviewed by Author on October 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.