கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய பேராதனை பல்கலைகழக மாணவர்கள் - வெளியானது அதிர்ச்சி தகவல்
--------------
கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய பேராதனை பல்கலைகழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்குஅறிவியல்பீடத்தின் 70மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என பல்கலைகழக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட மாணவர்கள் குழுவினரே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர் இந்த மாணவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கொரோனா பரவியுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளும் கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களிற்கு எதிரான செயற்பாடுகளும் வைரஸ் பரவலிற்கு காரணமாக அமைந்தன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு செல்லவேண்டாம் என சிரேஸ்ட மாணவர்கள் எச்சரித்துள்ளனர், அவர்களை பல்கலைகழகத்திலேயே தங்கியிருக்குமாறு உத்தரவிட்டுள்ளனர் இதன் காரணமாக பல்கலைகழகத்தில் வைரஸ் பரவியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து 70 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்
கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்திய பேராதனை பல்கலைகழக மாணவர்கள் - வெளியானது அதிர்ச்சி தகவல்
Reviewed by Author
on
October 15, 2021
Rating:

No comments:
Post a Comment