இலங்கையில் தனி நபரொருவரின் குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 5,353 ரூபா
இலங்கையில் தனிநபரொருவரின் அடிப்படைத் தேவை களுக்கான குறைந்தபட்ச மாதாந்தச் செலவாக ரூபா 5,353 கணக்கிடப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாத தரவுகளின் அடிப்படையில் இந்தக் கணக் கெடுப்பு நடத்தப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின்
மாதாந்த குறைந்தபட்ச செலவு ரூபா 5,810 ஆகும்.
மிகக் குறைந்தளவு வாழ்க்கைச் செலவைக் கொண்ட
மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது. அங்கு
மாதாந்த குறைந்தபட்ச செலவு 5,040 ரூபாவாகும்.
இலங்கையில் தனி நபரொருவரின் குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 5,353 ரூபா
Reviewed by Author
on
October 15, 2021
Rating:

No comments:
Post a Comment