அண்மைய செய்திகள்

recent
-

அப்பளம் சாப்பிட்டதற்காக சிறுமியின் வாயில் சூடு வைத்த தாயார் கைது

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகர் குடியிருப்புப் பகுதியில் 5 வயது மகளுக்கு நெருப்பால் சுட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தாயார் பொரித்து வைத்த உணவின் அப்பளத்தை குறித்த சிறுமி தாயாருக்குத் தெரியாமல் எடுத்துச் சாப்பிட்டுள்ளார். இதனால் தாயார் பெற்ற மகளுக்கு வாய்ப் பகுதியில் நெருப்பால் சுட்டுள்ளார். 

சம்பவத்தை அவதானித்த சிறுமியின் பேரன் அக்கராயன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதையடுத்து குறித்த தாயார் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை யில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை தொழிலுக் குச் சென்ற வேளை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அப்பளம் சாப்பிட்டதற்காக சிறுமியின் வாயில் சூடு வைத்த தாயார் கைது Reviewed by Author on October 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.