அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கௌதாரிமுனை மக்களுக்கு வயல் காணி பகிர்ந்தளிப்பு

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கெளதாரிமுனை கிராம மக்கள் தங்களுக்கு வயற்காணிகளை வாழ்வாதரத்திற்கு வழங்குமாறு கிளிநொச்சி  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர்  டக்கிளஸ் தேவனாந்தவிடம் விடுத்த   கோரிக்கை விடுக்கப்பட்டது 

அமைச்சர் டக்கிளஸ் தேவனாந்தவின் பணிப்பில் பெயரில் அரசகாணி பிரதேச செயலாளரால் அடையாளப்படுத்தப்ட்டு 89 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அக் காணிகள் துண்டு பிரிக்கப்பட்டு இன்றையதினம் 01.10.2021 அன்று லொத்தர் மூலம் பயனாளுக்குரிய காணித்துண்டுகள் அடையாளப்படுத்தப்பட்டு இன்றையதினம் தினம் 33  பயனாளிகளுக்கு காணிக்துண்டுகள் காண்பிக்கப்பட்டது 

மேலும் குறித்த பயனாளிகளுக்கு இலவசமாக விதை நெல் வழங்கவும் காணிகளை உழவு செய்யவும் ரூபா 27 லட்சம் கமநலசேவைகள் திணைக்களத்தினுடக அமைச்சர் டக்கிளஸ் தேவனாந்தவால் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

மேலும் இன்று 01.10.2021 அமைச்சர் டக்கிளஸ் தேவனாந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக பொறுப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது






கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கௌதாரிமுனை மக்களுக்கு வயல் காணி பகிர்ந்தளிப்பு Reviewed by Author on October 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.