கௌதாரிமுனையில் காணிகள் பெற்றோருக்கு இலவசமாக விதைநெல் வழங்கப்பட்டது! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில்!!
ஒவ்வொரு பயனாளிக்கும் சுமார் 6 ஆயிரம் ரூபா பெறுமதியான விதைநெல் இவ்வாறு வழங்கப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட கமநலசேவைகள் உதவி ஆணையாளர் தேவரதன் தகவல் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில், பூநகரி கமநலசேவைகள் திணைக்கள அலுவலகத்திலிருந்து இந்த விதைநெல் மூடைகள் உழவு இயந்திரங்கள் மூலம் கௌதாரிமுனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், கிராமசேவையாளர் ராஜகோபு, பூநகரி பிரதேச கமநலசேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் நகுலேஸ்வரன், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் பகீரதன் ஆகியோர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு விதைநெல் மூடைகளை வழங்கிவைத்தனர்.
ஒருசில மாதங்களுக்கு முன்னர் கௌதாரிமுனைப் பிரதேசத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தபோது, அந்தப் பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக அந்தப் பகுதியிலுள்ள அரச காணியை பிரதேச மக்கள் நெற்செய்கையை மேற்கொள்வதற்கு வழங்குவதற்கான ஏற்பாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.
அமைச்சரின் பணிப்புகரைக்கமைய, பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்களான செந்தூரன், சிவகுமார் ஆகியோர் காணியை அளவீடு செய்து, தெரிவுசெய்யப்பட்ட காணிகளற்ற பயனாளிகளுக்கு வழங்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
புதிதாக வழங்கப்பட்ட நெற்செய்கைக்கான இந்தக் காணிகளை இலவசமாக உழுது பண்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி மாவட்ட கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் தேவரதன் மேற்கொண்டிருந்தார்.
இன்றையதினம், அவரது ஏற்பாட்டில், பூநகரி பிரதேச கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக காணிகளைப் பெற்றோருக்கான விதைநெல் மூடைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கௌதாரிமுனையில் காணிகள் பெற்றோருக்கு இலவசமாக விதைநெல் வழங்கப்பட்டது! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில்!!
Reviewed by Author
on
October 14, 2021
Rating:

No comments:
Post a Comment