காற்றின் வேகமானது ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை அதிகரிக்கும்
மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை : திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் இக் கடற்பரப்புகளில் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் - பிரதானமாக சீரானவானிலை
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு - அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்
காலி - அடிக்கடி சிறிதளவில்மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழைபெய்யும்
கண்டி - அடிக்கடி மழைபெய்யும்
நுவரெலியா - அடிக்கடி மழைபெய்யும்
இரத்தினபுரி - அடிக்கடி மழைபெய்யும்
திருகோணமலை - பிரதானமாக சீரானவானிலை
காற்றின் வேகமானது ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை அதிகரிக்கும்
Reviewed by Author
on
October 16, 2021
Rating:

No comments:
Post a Comment