கண்டாவளையில் காணி தகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு
கிளிநொச்சி- கண்டாவளை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு மேலும் முற்றியதன் காரணமாக, மாமனாரின் கையை மருமகன் கொடூரமாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் அறிந்த உறவினர்களால் காயமடைந்தவர் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
மேலும், சம்பவத்தில் கையை இழந்தவர் 64 வயதுடைய கருணாமூர்த்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டாவளையில் காணி தகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு
Reviewed by Author
on
October 12, 2021
Rating:

No comments:
Post a Comment