மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்.
இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் தடவை மற்றும் 2 வது தடவையாக தோற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் , இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தில் உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான பைஸர் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
-இதன் போது மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்.
Reviewed by Author
on
October 21, 2021
Rating:

No comments:
Post a Comment