அண்மைய செய்திகள்

recent
-

யாழின் பிரபல ஆலயங்களுக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரிகள் ; ஆலய நிர்வாகம் விசனம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்குள் யாழ்.மாவட் டத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் சப்பாத்துக்களுடன் சென்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்களின் பண்பாட்டை மீறும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பா ணம் சென்ற நிலையில் செல்வச்சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டி ருந்தார். பொலிஸ் மா அதிபர் தனது சப்பாத்துக்களை அகற்றி இரண்டு ஆலயங்களிலும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.

 இருந்தபோதிலும் அவருடன் கூடவே சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர் சப்பாத்துக்களுடன் ஆலயங்களுக்குள் சென்றிருக்கின்றனர். வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் நிர்வாகத்தினர் மாத்திரம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

யாழின் பிரபல ஆலயங்களுக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரிகள் ; ஆலய நிர்வாகம் விசனம் Reviewed by Author on October 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.