அண்மைய செய்திகள்

recent
-

தும்புத்தடியால் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு; காலியில் சம்பவம்

காலி மகா மோதர பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது தந்தை தும்புத்தடியால் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை சிறுவனின் தந்தை அவனை தும்புத்தடியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. ஒன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததற்கே தந்தை அடித்துள்ளார். தலையில் அடி காயத்துக்குள்ளான சிறுவன் கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.

 சம்பவம் குறித்து காலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறுகையில், “அச்சிறுவன் தாயாரால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். காரப்பிட்டிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது சிறுவன் ஆபத்தான நிலையில் இருந்ததுடன் சுயநினைவை இழந்திருந்தான்” என்றார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 49 வயதான சிறுவனது தந்தை இன்று காலி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தும்புத்தடியால் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு; காலியில் சம்பவம் Reviewed by Author on October 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.