அண்மைய செய்திகள்

recent
-

ஆப்கானில் 13 பேர் சுட்டுக் கொலை


முந்தைய ஆட்சியில் அரசுப் படையில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் 11 பேர் உட்பட 13 பேரை தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ளதாகத் தெரியவருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

 கடந்த ஓகஸ்ட் 15-ம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் முந்தைய ஆட்சியில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30-ஆம் திகதி நுழைந்த தலிபான்கள் முந்தைய ஆட்சியில் அரசுப் படையில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் 11 பேர் உட்பட 13 பேரை கொலை செய்தனர். இதில் 17 வயது யுவதியும் அடக்கம் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானில் 13 பேர் சுட்டுக் கொலை Reviewed by Author on October 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.