அண்மைய செய்திகள்

recent
-

உரம் இல்லை; மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

உரப் பிரச்சினை, வெள்ள அனர்த்தம் காரணமாக மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதன்படி இன்று மலையகத்தில் மரக்கறிகளின் விலை நிலவரம் இதோ: ஹட்டனில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

தற்போது ஹட்டனில் 

ஒரு கிலோ கரட் 200-220 ரூபாவாகவும், 
 ஒரு கிலோ கத்தரிக்காய் 240 - 260 ரூபாவாகவும், 
ஒரு கிலோ தக்காளி 300 - 320 ரூபாவாகவும், 
ஒரு கிலோ கறிமிளகாய் 440 ரூபாவாகவும், 
ஒரு கிலோ பாகற்காய் 400 - 420 ரூபாவாகவும், 
ஒரு கிலோ போஞ்சி 300 - 320 ரூபாவாகவும், 
ஒரு கிலோ முட்டை கோவா 160-180 ரூபாவாகவும், 
ஒரு கிலோ பீட்ரூட் 180 - 200 ரூபாவாகவும் 
ஒரு கிலோ லீக்ஸ் 240-260 ரூபாவாகவும், 
ஒரு கிலோ நூக்கல் 200 - 220 ரூபாவாகவும், 
ஒரு கிலோ பயற்றங்காய் 220 -240 ரூபாவாகவும் 
ஒரு கிலோ புடலங்காய் 240 -260 ரூபாவாகவும் 
ஒரு கிலோ பூசணிக்காய் 120-130 ரூபாவாகவும், 
ஒரு கிலோ குடைமிளகாய் 350-400 ரூபாவாகவும், 
ஒரு கிலோ எலுமிச்சை 750 முதல் 800 ரூபாவாகவும் உள்ளன. 

மரக்கறி விலை அதிகரிப்பினால் கடும் சிரமங்களை எதிர் நோக்குவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினையால் மரக்கறி பயிர்கள் அழிந்து வருவதனால் மரக்கறிகள் சந்தைக்குச் சரியாக வருவதில்லை என்றும் இதனால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளன என்றும் நகர மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மரக்கறி விலை அதிகரிப்பினால் தமது மரக்கறி வியாபாரம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இந்த நிலைமைகளினால் தாம் கடும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக் கின்றனர்.

உரம் இல்லை; மரக்கறிகளின் விலை அதிகரிப்பு Reviewed by Author on November 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.