அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் 2180 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு : மாவட்ட பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்!

கடந்த மூன்று நாட்களாக பெய்த மழை வெள்ளத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டுள்ளது. இன்றுவரை(11) மாவட்டத்தில் 2180 ஏக்கர் நெற்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை 53 ஆயிரத்தி 255 ஏக்கர் நெற்செய்கையினை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டபோதும், 38 ஆயிரத்தி 370 ஏக்கர் பயிர்செய்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தைகிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகிய பிரதேசங்களின் கீழ் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களாக பெய்த மழைகாரணமாக 2180 ஏக்கர் அளவான நெற்பயிர்செய்கை வெள்ளத்தில் மூழ்கியநிலையில் பாதிக்கப்பட்டுள்ளன. 

இன்று(11) மழை குறைவடைந்து காணப்படுவதால் முழுமையான பாதிப்பு என்று கூறமுடியாது. சில பிரதேசங்களில் 15 நாள் பயிர்களாகவும், சில இடங்களில் 25 தொடக்கம் 30 நாள் பயிராகவும் காணப்படுகின்றன. சில விவசாயிகளின் வயல்கள் முழுமையாக அழிவடைந்துள்ள. மீண்டும் அவர்கள் மறுத்து விதைக்க தீர்மானித்துள்ளார்கள். இதற்காக அவர்களுக்கு மூன்று மாதம் அல்லது இரண்டரை மாத நெல்லினை விதைக்க பரிந்துரைசெய்துள்ளோம். 

மழைவெள்ளம் வடிந்தோடிவருகின்றன குறிப்பாக நந்திக்கடல், சாலைக்கடல் மற்றும் முல்லைத்தீவு நகர்பகுதி, நாயாற்று கடல்நீர் ஏரி, மன்னாகண்டல், மல்லிகைத்தீவு,பேராறு போன்ற ஆற்றங்கரையினை அண்மித்த பகுதிகளான தாழ்நிலபிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோடிவருகின்றன. பெரியளவில் பாதிப்பு இல்லாத நிலையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


முல்லைத்தீவில் 2180 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு : மாவட்ட பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்! Reviewed by Author on November 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.