இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள்
தனிமனித சமூகத்தின் நல்வாழ்வைக் கருதி நம் முன்னோர்களால் மிகுந்த சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களால் பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்து சமயம் தன் பண்பாட்டை ஒழுங்குபடுத்த பல்வேறு முறையியல் தன்மைகளை கொண்டுள்ளது.
அவற்றுள் பண்டிகைகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் சிறப்புப் பெறுகின்றது.
தீபாவளி என்பதன் பொருள்
தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளி.
சமுதாயத்தில் அர்த்தமும் உயிரோட்டமும் உள்ள வாழ்க்கையினை மகிழ்வாக வாழவேண்டும்
இப் பண்டிகை தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவையாகவும் உள்ளது. இந்நாளில் பகைவர்களும் தம் கோபங்களை மறந்து சகோதரதத்துவத்துடன் வாழ முனைகின்றனர்.
அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக அமைகின்றது.நம் மகிழ்ச்சி மற்றவருக்கு இடையூறாக இல்லாமல் மகிழ்வோடு கொண்டாடுவோம் தீபாவளியினை இன்பமே எந்நாளும் துன்பமில்லை
இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள்
Reviewed by Author
on
November 04, 2021
Rating:
No comments:
Post a Comment