இலங்கை மக்களிடம் விசேட கோரிக்கை - இராணுவத் தளபதி
வெளி மாகாணங்களில், ஓரளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சுமார் 50 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக, சிலர் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு மாறாக செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாளொன்றுக்கு 10 முதல் 25 கொரோனா நோயாளிகள் மரணமடைவதாகவும், நாளாந்தம் 500 தொடக்கம் 600 வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியேறும் போதும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களிடம் விசேட கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கை மக்களிடம் விசேட கோரிக்கை - இராணுவத் தளபதி
Reviewed by Author
on
November 05, 2021
Rating:
No comments:
Post a Comment