மன்னாரில் கொரோனா நிலமை தொடர்பாகவும்,டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல்
குறிப்பாக போக்குவரத்து துறையினருக்கு.அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளின் போது பயணிகள் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்கும் வகையில் தமது சேவையினை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
-மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான விசேட பஸ் சேவையினையும்,வெள்ளாங்குளத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பஸ் சேவையையும் உடனடியாக ஆரம்பிக்க உரிய தரப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 ஆம் 3 ஆம் அழைகளுக்கு நாங்கள் எவ்வாறு மிக துரிதமாக செயல்பட்டு மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோமோ அவ்வாறு மீளவும் தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
எனவே மீண்டும் சகல நடைமுறைகளையும் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
குறித்த விசேட கலந்துரையாடலில் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவு அதிகாரி, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கொரோனா நிலமை தொடர்பாகவும்,டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல்
Reviewed by Author
on
November 16, 2021
Rating:
Reviewed by Author
on
November 16, 2021
Rating:

No comments:
Post a Comment